தமிழரின் கையைப்பிடித்து தமிழரின் கண்ணிலே குத்தியிருக்கின்றார்கள்!சீனித்தம்பி யோகேஸ்வரன்
தமிழரின் கையைப்பிடித்து தமிழரின் கண்ணிலே குத்தியிருக்கின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது தமிழ் மக்கள் ஒரு இனபடுகொலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். இதற்கு நீதி வேண்டும் அவ்வாறான சம்பவங்களை நினைவுப்படுத்துவது இவ்வாறான நினைவுத் தூபிகள் தான்.
ஆனால் அவ்வாறான நினைவிடத்தை உடைத்து தமிழரின் கையைப்பிடித்து தமிழரின் கண்ணிலே குத்தியிருக்கின்றார்கள். எனவே ஒட்டு மொத்தமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தமிழ் உணர்வை யாழ்.பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அவரது பதவி உயர்வுக்காகவும்,பதவி மோகத்திற்காகவும் உடைத்திருக்கின்றார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கட்டடத்தை உடைத்தது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உணர்வுகளை உடைத்தாற் போல் அமைந்தள்ளது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்பட்ட நிலையில், எமது தமிழ் அரச உயர் அதிகாரிகளும், பதவி மோகத்தின் காரணமாக தமிழ் மக்கள் பட்ட வேதனைகளை மறந்து அவர்கள் அரசாங்கத்திற்கு வால் பிடிப்பவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அந்த உபவேந்தருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த நினைவிடத்தைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் அதனைச் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தின் பக்கம் இருப்பவர்கள். தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு துன்பியல் சம்பவங்கள் தொடர்பான ஒரு நினைவுச்சின்னங்களும் இருக்கக் கூடாது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு தான் ஜேவிபியினர் அவர்களது வீரர்கள் மரணித்த நினைவுத்தூபிகளை உருவாக்கியிருக்கின்றனர். ஆனால் அது உடைக்கப்படவில்லை.எமது தமிழ் மக்கள் ஒரு இனபடுகொலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.
இதற்கு நீதி வேண்டும் அவ்வாறான சம்பவங்ளை நினைவுப்படுத்துவது இவ்வாறான நினைவுத் தூபிகள் தான்.ஆனால் அவ்வாறான நினைவிடத்தை உடைத்து தமிழரின் கையைப்பிடித்து தமிழரின் கண்ணிலே குத்தியிருக்கின்றார்கள்.
எனவே ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தமிழ் உணர்வை யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அவரது பதவி உயர்வுக்காகவும்,பதவி மோகத்திற்காகவும் உடைத்திருக்கின்றார்.
எனவே, ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மீதும் காட்டப்பட்ட இந்த அடாவடித்தனத்தை நாம் மாத்திரமின்றி பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.