அழிவின் விளிம்பில் இலங்கை! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்
முடிந்தால், எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (S.M. Marikkar) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு தற்போது செயற்கையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்ற போதிலும் நாட்டுக்குள் இயற்கையில் அப்படியான பலம் இல்லை.
அத்துடன் அரசாங்கம் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பெற்றுக்கொண்ட கடனை பயன்படுத்தி மேற்கொண்ட தாமரை கோபுரம் போன்ற பலன் தராத செலவுகள் காரணமாக நாடு பெருளாதார ரீதியாக அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மரிக்கார் உரையாற்றும் போது ஆளும் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டு வந்ததன் காரணமாக சபையில் அமளியான நிலைமையை காணமுடிந்தது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam