சீன வைரஸ் விவகாரம்! சுகாதார அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
சமகாலத்தில் அதிகமாக கவனத்தை ஈர்த்துள்ள சீன வைரஸ் (HMPV) தொடர்பில் தற்போது அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருகின்றது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் குறித்து தகவல் கிடைத்தால், அது குறித்து தெரிவிப்பதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வைரஸ் தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினைக்குரிய சூழ்நிலையும் ஏற்படவில்லை. நமது சுகாதார அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல் Cineulagam
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam