சீனாவை அடுத்து ஏனைய நாடுகளையும் அச்சுறுத்தும் HMPV வைரஸ் தொற்று
சீனாவை அடுத்து HMPV தொற்றுக்கள் மலேசியாவிலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், அந்த நாட்டில் 327 HMPV தொற்றுகள் பதிவாகியுள்ளன,
இது 2023 இல் 225 என்ற தொற்றுகளுடன்; ஒப்பிடும்போது 45வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் சுவாச நோய்
சீனா உட்பட பிற நாடுகளில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள் பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மலேசியாவில் பொதுமக்கள் சவர்காரத்தினால் கைகளை கழுவுமாறும், முகக்கவங்களை அணியுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் உடல்நலத்தை முன்கூட்டியே கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும், மூடப்பட்ட மற்றும் நெரிசலான பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் அறிவுறுத்தப்படுவதாக மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) இரண்டு தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவின் பெங்களூருவில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
எனினும் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்ட இரண்டு தொற்றுகளிலும் சர்வதேச பயண வரலாறு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
HMPVவைரஸ்
அதாவது இந்த தொற்றுகள் சீனாவில் சுவாச தொற்றுகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புடன் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் 7 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற கொடிய கொரோனா தொற்றுநோய் வெளிப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சீனாவில் வெளிப்பட்டுள்ள HMPVவைரஸ் பல நாடுகளால் கண்காணிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களின் பல்வேறு காணொளிகளில், சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு பயங்கரமான காட்சியை சித்தரிக்கின்றன, முகக்கவசம் அணிந்தவர்கள், அங்கு காத்திருக்கும் பகுதிகளுக்குள் குவிந்துள்ளமை அந்தக் காணொளிகளில் காட்டப்படுகின்றன.
சீனாவின் வடக்குப் பகுதிகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இந்த தொற்றுக்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், இந்த நிலைமையை உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவிக்கவில்லை.
ஹொங்காங்கில் இந்த தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
தடுப்பு சிகிச்சை
இதனையடுத்து கம்போடியா மற்றும் தாய்வான் போன்ற அண்டை நாடுகளும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
HMPV வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். எனினும் சிறுவர்கள் மற்றும் முதியோர்களே அதிகமாக பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் இருமல் அல்லது தும்மும்போது ஏற்படும் சுவாச துளிகளால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கைகுலுக்குதல் அல்லது பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுதல் போன்ற நெருங்கிய தொடர்புகளும் இதற்கு காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றுக்காக விசேடமாக வைரஸ் தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.
எனினும், நீரேற்றத்தை பராமரித்தல் மற்றும் போதுமான ஓய்வு பெறுதல் என்பன அவசியமாகின்றன.
கடுமையான சந்தர்ப்பங்களில் ஒக்ஸிஜன் சிகிச்சை அல்லது நரம்பு வழி திரவங்களுக்காக மருத்துவமனையில் தொற்றுள்ளவர்களை அனுமதிக்கப்பட வேண்டியேற்படலாம் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை HMPVஒரு புதிய வைரஸ் அல்லது உடனடி தொற்றுநோய் அச்சுறுத்தல் அல்ல. இவை பருவக்கால தொற்றுக்களாக கருதப்படுகின்றன.
HMPV வைரஸ் முதன்முதலில் 2001 இல் நெதர்லாந்தில் குழந்தைகளில் கண்டறியப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |