இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான புள்ளி விபரம்
நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளர்கள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
13 வீதம் அதிகரிப்பு
கடந்த ஆண்டு பதிவான மொத்த ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருட முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 13 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மேலும், எண்ணிக்கையில் எச்ஐவி, எயிட்ஸ் தொற்றுக்கள் 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய நோயாளர்கள் மற்றும் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.
எனினும் 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1,520 எயிட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
