ஹிட்லர்களுக்கு இலங்கையில் வாய்ப்பில்லை-ஹெக்டர் ஹப்புஹாமி
இலங்கை போன்ற நாட்டில் ஹிட்லர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
பட்டினியில் இருக்கும் மக்கள் தலையில் துப்பாக்கிகளை வைப்பது நியாயமா?
வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இராணுவத்தில் இருக்கும் தொழிலாளிகளின் பிள்ளைகளின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து பட்டினியில் இருக்கும் மக்களின் தலையில் வைக்குமாறு கூறுவது நியாயமானதா எனவும் ஹெக்டர் ஹப்புஹாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பயங்கரமான கருத்தை வெளியிட்டார். மக்கள் உரிமைகளை கோரி வீதியில் இறங்கினால், அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இராணுவத்தை கொண்டு அடக்க போவதாக கூறினார்.
ஜனாதிபதியின் இந்த கருத்து முழு நாட்டு மக்களுக்கு செய்த அவமதிப்பு. இப்படியான கருத்தை வெளியிட்டிருக்கக்கூடாது என்பது எனது உணர்வு. மக்கள் வந்ததுடன் ஹிட்லர்களுக்கு இலங்கை போன்ற நாடுகளில் வாய்ப்பு கிடைக்காது.
மக்களுக்கு இருந்த பிரச்சினைகள் காரணமாகவே கோட்டாபய ராஜபக்ச துரத்தியடிக்கப்பட்டார் எனவும் ஹெக்டர் ஹப்புஹாமி மேலும் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
