மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய இரண்டாம் பங்குனித் திங்கள்!
ஈழத்து சிறப்பு மிக்க யாழ்.தென்மராட்சி மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய இரண்டாம் பங்குனித் திங்கள் பூசை வழிபாடுகள் இன்று(24) வெகு விமர்சையாக இடம்பெற்றன.
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் பொங்கள், காவடி, பாற்குடம் எடுத்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.
பங்குனித் திங்கள் விரதம்
பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழமையாகும். இந்தநாளில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு மேற்கொள்வர்.

சிறப்பாகக் கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடுகள் நடைபெறுவது வழமை.
பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் சகல சம்பத்தும் பெற்று வாழ்வர் என்பது நம்பிக்கையாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri