டயகம சிறுமி ஹிசாலினிக்கு ஏற்பட்ட கொடூரம்! திசை திருப்பப்படும் விசாரணைகள்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற சிறுமி தொடர்பான விசாரணைகள் திசைத்திருப்பப்படுவதாக ஹிசாலினியின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது பிள்ளையை தொழிலுக்காகவே அங்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவரது உடல் சவப்பெட்டியிலேயே எமக்கு கிடைத்தது.
பிள்ளைக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக காவற்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் இங்கு வந்து அவர்கள் எழுப்புகின்ற கேள்விகள் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பிள்ளைக்கு இங்கு வைத்து என்ன ஆனது, பிள்ளை இங்கு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள்.
நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கின்றவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால், நாட்டில் இவ்வாறு எத்தனை சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இடம்பெற்றுக்கின்றன? எமது பிள்ளைக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தமாட்டேன் என்று எமது பிள்ளையின் உடல் மீது சபதம் எடுத்திருக்கிறேன் என ஹிசாலினியின் தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri