எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்க முயற்சிக்கும் அரசாங்கம் : ஹிருணிகா சாடல்
அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் தள்ள முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த போக்கை பார்த்தால் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரையும் சிறையில் அடைக்கும் ஓர் நிலையையே அவதானிக்க முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைப்பார்கள் என்ற அச்சத்தில்
இறுதியில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளே தள்ளி விடுவார்கள் சிறையில் அடைப்பார்கள் என்ற அச்சத்தில் அனைவரும் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அரசாங்கங்களை போன்று அல்லாது தற்போதைய அரசாங்கம் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக இந்த அரசாங்கம் கொலைகாரர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் வாழ்க்கையில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் மக்களின் உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடி பிரச்சினையில் சிக்கினாலும் பரவாயில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.