அரசாங்கத்திற்கு ஹிருணிகா விடுத்துள்ள எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு
மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு,தனது குடும்பத்தை வளர்க்கும் செயற்பாட்டை ரணில் ராஜபக்ச அரசு முன்னெடுக்கிறது என முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“நாட்டையும் மக்களையும் அரசு அடக்கி ஆள்கிறது. மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு அடக்க முனைக்கிறது. நாட்டை நாசம் செய்கிறது கோட்டாபய குடும்பத்துக்கு சேவை செய்கிறது.
இதுதான் ரணில் அரசின் சேவை. நாட்டை மீட்டுடெடுத்த மக்களை நடு வீதியில் தள்ளி, மாணவத் தலைவர்களையும் மதத்தலைவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது. இதை இப்படியே விடப் போவதில்லை. இதற்கு முற்று புள்ளி விரைவில் வைப்போம்.
மற்றுமொரு மக்கள் அலையயை நவம்பரில் இருந்து ஆரம்பிப்போம். இதற்கான முதல் கட்டம், கொழும்பில் எதிர்வரும் வரும் மாதம் 2 ஆம் திகதி தெரியும். நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. சிறையில் தள்ள முடியாது.இந்த அரசுக்கு சரியான பாடம் புகட்டுவோம்.
பயங்கரவாத தடை சட்டம் உடன் நீக்க வேண்டும். கைது செய்ய பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள், போராட்ட உறுப்பினர்கள்,தேரர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பிரதான செய்திகளின் தொகுப்பு,





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ட்ரம்ப் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த இளவரசி கேட்டை முறைத்த ராணி கமீலா? இணையத்தில் வைரலாகும் செய்தி News Lankasri
