நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக ஹிருனிகாவின் நிலைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக ஹிருனிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பதவியை இழந்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக தாம் நியமிக்கப்பட்டால் அந்தப் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனத்தின் எதிர்ப்பு
எனினும் அந்தப் பதவியை தமக்கு வழங்குமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஊடக நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் ஆட்டுவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிருனிகாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதற்கு ஊடக நிறுவனமொன்று எதிர்ப்பை வெளியிட்டதாக வெளியான தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
