திடீரென மகிந்தவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சீனப்பிரதமர்! பேசப்பட்டது என்ன - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் அரசுத் தலைமைக்குள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு முற்றியிருப்பதாகக் கருதப்படும் சமயத்தில், நேற்று சீனாவின் பிரதமர் லீ குயாங்க், இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரிவான பேச்சு நடத்தியிருக்கின்றார்.
இலங்கை விவகாரத்தில் இந்திய - சீன தலையீடு குறித்துப் பேசப்படும் இச்சமயத்தில் இந்தத் திடீர் உரையாடல் கொழும்பு அரசியலில் துருவமயப்பட்ட நிலைகளில் ஒருபக்கத்தின் அணி சேரும் போக்கைச் சுட்டுவதாக இருக்கின்றது என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்குச் சீனா ஆதரவளிக்கும் எனச் சீனாவின் பிரதமர் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான தொலைபேசி உரையாடலின்போது உறுதியளித்துள்ளார் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
