கனடாவில் வாழும் இந்துக்கள் வெளியேற வேண்டும்: காலிஸ்தான் அமைப்பு எச்சரிக்கை
கனடாவில் வாழும் இந்தியர்களும், இந்துக்களும் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என காலிஸ்தான் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை எனவும் காலிஸ்தான் தனிநாடு கோருவோர் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள் எனவும் ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். .
இந்தியாவின் பஞ்சாப், அரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளின் எச்சரிக்கை
இந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டதுடன் இதனால் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய சீக்கியர்களில் இலட்சக்கணக்கானோர் கனடாவில் அகதிகளாக அடைக்கலம் புகுந்ததாக கூறப்படுகிறது.
கனடாவின் மொத்த மக்கள்தொகையில் சீக்கியர்கள் தற்போது 2.1 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கனடா அரசியலிலும் சீக்கியர்கள் பங்களிப்பு வலிமையாகிய நிலையில் இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு இந்திய தூதரக அதிகாரியையும் வெளியேற்றியுள்ளது.
இதை கண்டித்த இந்தியா கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றிய விடயமானது இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் நிலையை அதிகப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம், கனடாவில் வாழும் இந்துக்களை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |