அரசாங்கத்தின் பார்வையில் புறக்கணிக்கப்படும் இந்து மதம் - எங்களுக்கும் இடம் வேண்டும்...! எழுந்த குரல்
இலங்கையில் வாழும் இந்து மக்களும் இந்நாட்டின் பிரஜைகளே. எனவே, அரசாங்கம் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது எங்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான சுரேன் சந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகிய நான்கு மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்கின்றனர். எனினும், அரசாங்கம் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்களை எடுக்கும்போது இந்து மத மக்களுக்கும் அவர்களின் கலாசாரத்திற்கும் வழங்கப்படும் முக்கியத்துவத்தில் தளம்பல் நிலை காணப்படுகின்றது.
எங்களுடன் கலந்தாலோசிப்பதற்கான அமைப்புகள் இருந்தபோதிலும், அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்து மதத்திற்கு அரசாங்கம் ஏன் குறைந்த முக்கியத்துவம் வழங்குகின்றது? தமிழர்களுக்கான அடையாளம் எங்கு இல்லாமல் போகின்றது? என்பது தொடர்பான அவரது கருத்துக்களை முழுமையாக காணொளியில் பார்க்கலாம்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening