வறுமையை சவாலாக கொண்டு தங்கப்பதக்கம் வென்ற கிளிநொச்சி மண்ணின் வீராங்கனை (Photos)
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இவர் குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின்; ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் இந்திய அரசின் நிதிப்பங்களிப்புடன் 2012ம் ஆண்டு அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய கிராமமாக அமைக்கப்பட்ட இடமே புதிய நகர் கிராமமாகும் .
பழைய கண்டி வீதிக்கு அருகில் உள்ள இந்த கிராமத்தில் போதியளவு அடிப்படை வசதிகள் இல்லை. போக்குவரத்துக்கு வீதி வசதி இல்லை. பொது போக்குவரத்து சேவை இல்லை. வயற்காணிகளுக்கு நடுவில் இவர்கள் வாழ்ந்தாலும் இவர்களுக்கு வயற்காணிகள் இல்லை. பெரும்பாலும் உடல் உழைப்பினை நம்பி வாழும் தொழிலாளர்கள் தான் அதிகம்.
இவ்வாறு வறுமையும் வாழ்வின் சுமைகளையும் சவாலாக கொண்டு கணேஸ் இந்துகாதேவி
தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.








