உடற்பாகங்கள் வெட்டப்பட்டு இந்து பெண் கொடூர கொலை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சின்ஜோரோ நகரில் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணின் சிதைக்கப்பட்ட உடல் நேற்று வயலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
4 குழந்தைகள்
தயா பீல் (Daya Bheel) எனும் 40 வயது இந்து பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Dated 28/12/22
— Jiyala Amar lal Bheel (@JiyalaAmarlal) December 29, 2022
40-year-old Daya Bheel suddenly disappeared from agri field yesterday near Sinjhoro.Her dead body was found in a very bad condition in mustard field.Her head was separated from the body and the flesh of the whole head had been cut off by the beasts.
1/3@KeshooBai pic.twitter.com/Q9Ulm3Hj5e
கொலை செய்யப்பட தயா பீலுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
குறித்த பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு, தோல் உரிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
அதுமட்டுமின்றி, கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, விதவை பெண்ணான அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைக்கப்பட்டு உள்ளது. அவரது தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது.
அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து பொலிஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்து பெண் கொடூரமாக கொல்லப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தனது சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
