வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

Sri Lanka Police Vavuniya Hinduism Northern Province of Sri Lanka
By Diasa Mar 07, 2024 10:24 PM GMT
Report

புதிய இணைப்பு

வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யுமாறு நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஆலயத்தின் செயலாளர் தமிழ்செல்வன் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

''வெடுக்குநாறி ஆலயத்தில் பூஜைகளுக்காக சென்றபோது பூசகர் உள்ளிட்ட சிலரை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸார் மறித்து ''பூஜைகளுக்கு மின்சாரத்தினை பயன்படுத்த வேண்டாம்" என கட்டளையிட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

பொலிஸார் அச்சுறுத்தல் 

அதன்படி ஆலய பூஜை ஒழுங்குகளுக்கு சென்றபோது அவர்கள் பயணித்த தண்ணீர் கொள்கலன் வாகனமானது பழுதடைந்துள்ளது.

அதனை சரி செய்ய 15 நிமிடங்கள் சென்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸாரில் இருவர் பூசகர் உள்ளிட்ட குழுவினரிடம் வருகைத்தந்து ''ஆலயத்திற்கு செல்லவேண்டாம். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வந்தவுடன் அவரின் அனுமதியோடு செல்லுங்கள்'' என உத்தரவிட்டுள்ளனர்.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி | Hindu Priest Arrested In Vavuniya

நான் உள்ளிட்ட எங்களது குழுவினர் உளவு இயந்திரம் ஊடாக ஆலயத்திற்கு முன்னதாக சென்றுவிட்டோம். இதன்போது பின்னால் வருகைதந்த பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட 5 பேரை அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது அடையாள அட்டையை பிடுங்கி முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் ஆலய பூசகரை இழுத்து சென்று வண்டியில் ஏற்றியுள்ளார். இதன்போது ஆலயத்தில் இருப்பவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யுமாறு ஏனைய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கூட எமது வழிபாட்டுரிமை தொடர்பில் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் இந்த அடாவடித்தனமான செயற்பாடானது கண்டிக்கத்தக்கது. எமது வழிபாட்டுரிமையை பாதுகாக்க ஒழுங்கு செய்ததன்படி பூஜைகள் நடைபெறவேண்டும்.

மேலும் கைதுசெய்யப்பட்ட ஆலய பூசகர் உட்பட எமது நிர்வாகத்தினர் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளையத்தினம் இடம்பெறும் பூஜைகளில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.'' என்றார்

இரண்டாம் இணைப்பு

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த கைது தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

முதலாம் இணைப்பு

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா உட்பட இருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே அவர் இன்று (07.03.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

அதேவேளை, விழாவுக்காக கொண்டு செல்லப்பட்ட தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர் பெளசர் போன்றன பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி | Hindu Priest Arrested In Vavuniya

பறிக்கப்பட்ட பொருட்கள்

அத்துடன், ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளன.

திருக்கோணேஸ்வரம் சிவராத்திரி நிகழ்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு

திருக்கோணேஸ்வரம் சிவராத்திரி நிகழ்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு


குடிநீரை இழக்கத் தயாரில்லை : அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த தோட்ட மக்கள்

குடிநீரை இழக்கத் தயாரில்லை : அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த தோட்ட மக்கள்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US