மது போதையில் அட்டகாசம் செய்த மதகுரு பொலிசாரால் கைது
வவுனியா(Vavuniya) புகையிரத வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று(30) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, புகையிரத நிலைய வீதியில் மது போதையில் நேற்று(29) இரவு 9.30 மணியளவில் சென்ற மதகுரு ஒருவர் அப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கொத்து ரொட்டி போடும் கூட்டு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
பொலிசாரால் கைது
அத்துடன், அருகில் இருந்த தொலைக்காட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக்காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் வீதியில் சென்றோர் குறித்த மதகுருவை மடக்கிப்பிடித்து வைத்திருந்ததுடன் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த மதகுருவை கைது செய்ததுடன், வவுனியா பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின் இன்று (30) பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
