இந்து பௌத்த கலாசார பேரவையால் இரண்டாம் மொழி சிங்களம் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
இந்து பௌத்த கலாசார பேரவையால் இரண்டாம் மொழி சிங்களம் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இந்து பெளத்த பேரவையின் பொதுச் செயலாளர் தேசமாணிய எம்டி .எஸ். இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் வார இறுதி நாட்களில் காலை 9 மணி தொடக்கம் ஒரு மணி வரை இக் கற்கை நெறியானது இடம்பெறும்.
இப் பயிற்சி நெறியானது ஆறுமாதங்கள் 120 மணித்தியாலங்கள் இடம்பெறவுள்ள நிலையில் தரம் 9 க்கும் மேற்பட்ட மாணவர்களும், அரச உத்தியோகத்தர்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் பங்குபற்ற முடியும்.
யாழ் மாவட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி, புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, உடுத்துறை மகா வித்தியாலயம், யாழ் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெறும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வித்தியானந்தா கல்லூரி, கல்யாண வேலர் அறநெறிப் பாடசாலை, விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம்பெறும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கார் போனியா கல்லூரி, மத்திய கல்லூரி, வினாசியோடை மகா வித்தியாலயம், தர்மபுரம் மகாவித்தியாலயம், முருகானந்தா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெறும்.
வவுனியா மாவட்டத்தில் நாத் தாண்டிக்குளம் பிரமண்டு மகாவித்தியாலயத்திலும் மன்னார் மாவட்டத்தில் வழமையாக இடம்பெறும் பாடசாலைகளிலும் இக் கற்கைநெறியானது இடம்பெறும்.
மேலும், குறித்த சிங்கள மொழியை கற்க விரும்புவோர் பின்வரும் பாடசாலைகளில் தொடர்பு கொள்ள முடியும் என்பதோடு மேலதிக விபரங்களுக்கு 0760282693 என்ற அலுவலக இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.