மலையகத்தவர் வேண்டுவது அனுதாபம் அல்ல, நியாயம்! மனோ எம்.பி காட்டம்

Sri Lanka Upcountry People Mano Ganeshan Central Province
By Vinoja Aug 10, 2023 07:47 PM GMT
Report

மலையகத்தவர் வேண்டுவது அனுதாபம் அல்ல, நியாயம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், எமது மக்கள் மத்தியில் நிலவும் நவீன அடிமைத்துவ நிலைமைக்கு இலங்கையை மாறி, மாறி ஆண்ட இனவாத அரசுகள், இந்திய அரசு மற்றும் பிரிட்டிஷ் அரசு ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பான பிரேரணை தொடர்பான அவரின் ஆரம்ப உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நவீன அடிமைத்தனம் முடிவுக்கு வர வேண்டும்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கு நிலவும் பெருந்தோட்ட “துரைமார் அடிமைத்தனம்” ஒழிய வேண்டும். இனியும் பொறுக்க முடியாது. எங்களை “இரத்த தேநீர்” என “சிலோன் டீ”க்கு எதிராக பிரசாரம் செய்யும் நிலைக்கு தள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன்.  இந்த நவீன அடிமைத்தனம் இனி முடிவுக்கு வர வேண்டும். 

இதற்காக மலையக தமிழ் மக்கள் இன்று வேண்டுவது எவரதும் அனுதாபங்கள் அல்ல. எமக்கு தேவை நியாயம்.

மலையகத்தவர் வேண்டுவது அனுதாபம் அல்ல, நியாயம்! மனோ எம்.பி காட்டம் | Hilly Tamils Want Is Not Sympathy But Justice

இன்றைய இந்திய அரசு இதை உணர்ந்துள்ளது. ஆகவே எமது மக்களின் நல்வாழ்வுக்காக, முதற்கட்டமாக 300 கோடி இலங்கை ரூபாய்களை பிரதமர் நரேந்திர மோடி நன்கொடையாக ஒதுக்கி தந்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியாவுக்கு நன்றி. இனி இந்தியாவை பின்பற்றி பிரிட்டிஷ் அரசும் ஸ்டேர்லிங் பவுன்ட்ஸ்களை எமக்காக ஒதுக்கி தர வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தபடி, மலையக மக்களின் அதிக வாக்குகளை பெற்ற கட்சியின் தலைவன் என்ற முறையில் நான் கோருகிறேன்.

இந்த கோரிக்கையை இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சிய தூதுவர் லிசா வன்ஸ்டல் (Lisa Whanstall) லண்டனில் உள்ள தனது அரசாங்கத்துக்கு கொண்டு செல்வார் என நம்புகிறேன்.

200 வருடங்களை நிறைவு செய்தது மலையகம் 

முன்னைய மற்றும் சமீபத்தைய கணக்கீடுகள் மற்றும் அறிக்கைகளில் இலங்கை மத்திய வங்கி, உலக வங்கி, ஐநா உலக உணவு திட்டம், ஐநா உணவு விவசாய நிறுவனம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐநா விசேட அறிக்கையாளர் டோமாயோ ஒபகடா, ஆகியோர், பெருந்தோட்ட வதிவாளர்களை ஒதுக்கப்பட்ட, நலிந்த  உரிமையற்ற சமூகமாக அடையாளம் கண்டுள்ளனர். 

மேலும் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையானது , வறுமை, உணவு பாதுகாப்பிமின்மை, போசாக்கின்மை ஆகிய துறைகளில் மேலும் மோசமான மட்டங்களுக்கு மலையக மக்களை தள்ளியுள்ளது.

மலையக தமிழ் இலங்கையர் சமூகத்துக்குள் வரும் பெருந்தோட்ட பிரிவினர், இலங்கையில், 1823ல் முதல் இன்றுவரை 200 வருடங்களை நிறைவு செய்துள்ளனர்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்வானது மாறாமில்லாமல், முதலாவதாக 125 வருட பிரிட்டிஷ் ஆட்சி, இரண்டாவதாக 24 வருட பிரித்தானிய முடியாட்சி கீழான சுதந்திர இலங்கை ஆட்சி, மூன்றாவதாக 51 வருட இலங்கை குடியரசு ஆட்சி என மூன்று யுகங்கள் காணப்படுகிறது.

மலையகத்தவர் வேண்டுவது அனுதாபம் அல்ல, நியாயம்! மனோ எம்.பி காட்டம் | Hilly Tamils Want Is Not Sympathy But Justice

எனினும் தற்போது தெரிகின்ற ஒரே மாற்றம், வெள்ளை பிரிட்டிஷ் ராஜ்யத்தில் இருந்து, மாநிற பெருந்தோட்ட ராஜ்யத்துக்கு மாறியதுதான். இது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில்  நிலவும் வெட்கங்கெட்ட நவீன அடிமைத்துவம்.

பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் நலிவடைந்த பிரிவினராக மானிட வளர்ச்சியின் அனைத்து புள்ளி விபரங்களிலும் நாட்டின் ஏனைய மக்களை விட மிகவும் பின்தங்கியுள்ளனர்.

மலையக மக்களின் நிலை 

இலங்கை பெருந்தோட்டங்களில் நிலவும் நவீன அடிமைத்துவம் இந்த மக்களை, மனிதாபிமானமற்ற தாழ்நிலை வாழ்நிலைமைகள், அரைகுறை சுகாதார பாதுகாப்பு, போஷாக்கின்மை, ஊட்டச்சத்து அற்ற சிசு, கர்பிணி மரணம், வறுமை, பெண்களின் மீதான அதி மோசமான சுமை, சிறுவர் தொழில், மோசமான பணி நிலைமைகள், குறைந்த சம்பளத்துடன் அதிக நேர வேலை, பாலியல் தொந்தரவு ஆகியன காணப்படுகின்றன.

மேலும், உடல் ரீதியான மற்றும் வாய்மொழி தாக்குதல் ஆகியவற்றடன் கூடிய வீட்டு வேலை, சுரண்டல் மற்றும் பாரபட்சம், பெருநிறுவன தோட்டங்களில், அரச தோட்டங்களில், தனியார் சிறு தோட்டங்களில் நியாயமற்ற தினக்கூலி முறைமை, தோட்ட நிர்வாகங்களின் ஒடுக்குமுறைக்கு துணை போகும் பொலிஸ் அதிகாரிகள், சமமற்ற கல்வி வாய்ப்புகள், தரமற்ற கல்வி, பாடசாலைகளிருந்து மாணவர் இடை விலகல், சட்ட நீதியை பெரும் வாய்ப்பின்மை, மொழி உரிமையின்மை, வாழ்வதற்கும், வாழ்வாதாரத்துக்கும் நாட்டின் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் காணி உரிமை பெருந்தோட்ட மக்களுக்கு மறுக்கப்படுவது ஆகிய கொடுமைகளுடன் வாழ வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

மலையக தமிழ் இலங்கையர் சமூகத்துக்குள் வரும் பெருந்தோட்ட பிரிவினரின் சமூக பொருளாதார அந்தஸ்துகளை உயர்த்த, பெளத்த போதனைகள், விசேட ஒதுக்கீட்டு கொள்கைகள் அடிப்படையில், இன மற்றும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் கரங்கோர்க்குமாறு, இம்மக்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் என்ற முறையில், அரசாங்கத்தையும், சகோதர மக்கள் பிரதிநிதிகளையும் நாம் கோருகிறோம்.

பிரஜைகள் என்ற அந்தஸ்து வேண்டும்

அனுதாபங்களையல்ல, நியாயத்தையே நாம் எதிர்பார்க்கிறோம். இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படும் இலங்கையின் முழுமையான பிரஜைகளாவதையே நாம் எதிர்பார்க்கிறோம்.

மலையகத்தவர் வேண்டுவது அனுதாபம் அல்ல, நியாயம்! மனோ எம்.பி காட்டம் | Hilly Tamils Want Is Not Sympathy But Justice

பெருந்தோட்ட குடியிருப்புகள், இலங்கை தேசிய பொது நிர்வாக கட்டமைப்புகளுக்குள் கொண்டு வரப்பட்டு, போதுமான கிராம சேவையாளர் பிரிவுகளும், பிரதேச செயலக பிரிவுகளும், உருவாக்கப்பட்டு, நாட்டின் ஏனைய கிராமிய பிரதேச மக்களுக்கு இணையாக, பன்முகப்படுத்தபட்ட அரச சேவைகள் மற்றும் நலன்புரி சேவைக்களை பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தி, பெருந்தோட்ட நிர்வாகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து விடுபட்டு, முழுமையான பிரஜைகள் என்ற அந்தஸ்து கிராமிய, பிரதேச செயலக, மாவட்ட மட்டங்களில் உருவாக வேண்டும் என நாம் கோருகிறோம்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் நடப்பில் உள்ள சனத்தொகை விகிதாசாரத்தை போன்று பெருந்தோட்ட பிரதேசங்களிலும் புதிய பிரதேச சபைகளை நிர்ணயம் செய்து உருவாக்கப்பட வேண்டும் எனவும் நாம் கோருகிறோம்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US