இலங்கையில் ஜப்பானிய வாகனங்களுக்கு அதிக வரி: தூதுவர் வெளியிட்ட அதிருப்தி
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவது குறித்து ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் தனது கருத்துக்களை வெளியிட்ட தூதுவர்,
தூதுவர் வெளியிட்ட அதிருப்தி
வேறு ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும்போது, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், ஜப்பானுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து இலங்கை ஆராயவேண்டும் என்றும், அதிக வரி விதிப்புக்கள் தொடர்பில் பேசப்படவேண்டும் என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளைக் கையாள்வதில் ஜப்பானின் அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த விடயத்தில், ஜப்பானிய பிரதமர் உடனடியாக அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசி, தீர்வுக்கு வழியேற்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
