யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் உயர் கௌரவத்தினை பெற்றுக்கொண்ட மலையக மாணவி

Jaffna
By Independent Writer Feb 27, 2021 02:01 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. இன்று நடைபெற்ற அமர்வின்போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ். இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்குஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ். பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.

யாழ் கல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொண்ட செல்வி முனியப்பன் துலாபரணி இது தொடர்பில் தெரிவிக்கையில், எனது பெயர் முனியப்பன் துலாபரணி.

எனது சொந்த ஊர் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமம் ஆகும்.

எனது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். நான் ஆரம்பக் கல்வியை மாத்தளை இந்து தேசிய கல்லூரியிலும், தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியில் கல்வி கற்றேன். உயர் தரத்தில் 1A, 2B ஐ பெற்றுக் கொண்ட நான், எனது முதல் பல்கலைக்கழகத் தெரிவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தெரிவே அமைந்தது.

வரலாறு மற்றும் ஊடகக் கற்கைகள் துறையில் முதலாம் வருடத்தில் பயின்ற நான், இரண்டாம் வருடத்திலிருந்து ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்புக் கலையாக பயின்றேன். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றேன்.

எமது பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் ஓர் பாட அலகாக இல்லாமையால் புதிய பாடத்தெரிவு என்ற அச்சம் ஆரம்பத்தில் என் மனதில் எழவே செய்தது.

ஆனால், விரிவுரையாளர்களின் சிறப்பான கற்பித்தல் முறைகள் அவ் அச்சத்தை போக்கியதால் இலகுவாகவும் விருப்புடனும் ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்பாகக் கற்கக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது. செயன்முறைப் பயிற்சிகள் மற்றும் கமரா மீது கொண்ட ஆர்வமே என்னைத் தொடர்ந்து ஊடகக் கற்கைகள் துறையைக் கற்கத் தூண்டியது எனலாம்.

முதலாம் வருடத்தில் ஊடகங்கள், தொடர்பாடல் சார்ந்து கோட்பாட்டு ரீதியாக கற்ற நாம், இரண்டாம் வருடத்திலிருந்து செயன்முறை ரீதியாக கற்றலில் ஈடுபட்டோம். சஞ்சிகை வெளியீடு, புகைப்பட இதழியல், ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் தொழிற்சார் பயிற்சி என்பன ஊடகக் கற்கைகள் துறையால் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் என்றே கூற வேண்டும்.

ஊடகத் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழிற்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன எமக்கான ஊக்கத்தை அளித்தது. பாட திட்டத்தில் கற்ற விடயங்களை ஊடக நிறுவனங்களில் நாம் பயிற்சிக்காகச் சென்ற காலங்களில் அனுபவத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது.

இதனூடாகவே ஊடகத்துறைக்குள் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பும் அதிகமானது என்றே கூறலாம். ஊடகத் துறையில் எழுத்துத்துறைச் சார்ந்து சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவாக உள்ளது.

அன்று எமக்கு வழிகாட்டிகளாக இருந்த எமது ஊடகக் கற்கைகள் துறை சகோதர சகோதரிகள் பலர் இன்று இலங்கையில் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றமை எங்களுக்கும், எமக்கு அடுத்தபடியாக உள்ள சகோதர சகோதரிகளுக்கும் பெரும் நம்பிக்கையளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் எமக்கான வாய்ப்புக்களை உருவாக்கி எம்மை செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின் துறைத்தலைவர் கலாநிதி. சி. ரகுராம் அவர்களுக்கும், விரிவுரையாளர்களான திரு. யூட் தினேஸ் கொடுதோர், திருமதி. பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோருக்கும் மற்றும் எனது கல்விக்கு உற்ற துணையாக இருந்த எனது குடும்பத்தார் மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்துக் கௌரவித்த நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US