அரிசி ஆலை உரிமையாளர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!
பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விடவும் கூடுதல் விலைக் நெல் கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு வழங்கும் உத்தரவாத விலையை விடவும் ஐந்து ரூபா கூடுதலாக வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
உத்தரவாத விலை
கூடுதல் விலைக்கு தனியாருக்கு தாம் நெல்லை விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விடவும் 5-6 ரூபா கூடுதலாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவதாகவும் அதனால் அவர்களுக்கு நெல்லை விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உத்தரவாத விலையை ஒரு விவசாயிடம் இருந்து அதிகபட்சமாக ஐயாயிரம் கிலோ கிராம் எடையுடைய நெல்லை மட்டுமே அரசாங்கம் கொள்வனவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் ஐநூறு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam