கொழும்பின் புறநகர் பகுதிகளில் உயர் மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் - பொது சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸின் பரவல் உயர் மட்டத்தில் உள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம் பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார். கம்பஹா, பதுளை, கண்டி, குருநாகல், காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை,மாத்தளை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களிலேயே உயர் பரவல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொது சுகாதார ஆய்வாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடைமுறையில் குறைந்தளவான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாகவும் பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாவதுமே இதற்கான காரணங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொரோனா பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பழுதடைந்தமைக் காரணமாக பரிசோதனைகளின் முடிவுகள் நான்கு முதல் ஏழு நாட்களுக்கு தாமதம் அடைந்துள்ளதாக பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தாமதமாவது கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.




