உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்! தற்கொலை குண்டுதாரிகளின் சகோதரருக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் போவதாகத் தகவல் அறிந்தும் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் தாக்குதலுக்கு ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளின் சகோதரர் இன்சாப் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

இருவருக்கு பிணை
குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று வருடங்களாக விளக்கமறியலில் உள்ளதால், அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் முதுமை மற்றும் குற்றச் செயல்களின் தன்மை என்பனவற்றை கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam