பதவி விலகுவதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியிடம் அறிவித்த மிலிந்த மொரகொட
புதுடில்லியில் பணியாற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பதவியில் இருந்து விலகுவதற்கான உயர்ஸ்தானிகரின் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிலிந்த மொரகொட மேற்கொண்டுள்ள பணிகள்
இராஜதந்திரி என்ற தொழிலை கொண்டிராத அரசியல்வாதியான மிலிந்த மொரகொட, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பது மற்றும் பலப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் பல பணிகளை மேற்கொண்டுள்ளார்.
உயர்ஸ்தானிகராக இருந்த காலத்தில் மொரகொட, இலங்கை மற்றும் இந்தியாவின் மின்சாரக் கட்டங்களை ஒன்றோடொன்று இணைப்பது உட்பட முயற்சிகளில் கவனம் செலுத்தி, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஒரு விரிவான மூலோபாயத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |