இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் (Photos)
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அஜர்பைஜான், பஹ்ரைன், கம்போடியா, கஜகஸ்தான், தென் கொரியா, மங்கோலியா, சிரியா, தஜிகிஸ்தான், லெபனான், கிர்கிஸ்தான் மற்றும் பிஜி ஆகிய நாடுகளின் தூதரகத் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இலங்கையின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதும், ஒத்துழைப்பிற்கான புதிய பகுதிகளை ஆராய்வதும் இந்த ஈடுபாட்டின் நோக்கமாகும்.
பொருளாதார நெருக்கடி
இதன்போது இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து தூதர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா, கடற்தொழிற் துறை போன்றவற்றில் ஒத்துழைப்பு குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது.
உயர்ஸ்தானிகர் மொரகொட இலங்கைக்கும் அங்கீகாரம் பெற்ற புது தில்லியை தளமாகக் கொண்ட இராஜதந்திர பிரதிநிதிகளின் தூதர்களுடன் மேற்கொண்ட ஏழாவது சந்திப்பு இதுவாகும்.
வெளிவிவகார அமைச்சு
முன்னைய சந்தர்ப்பங்களில், அவர் ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க ரூ கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களின் தூதர்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர்.
புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற
94 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கும்
இடையிலான முக்கிய ஒருங்கிணைப்புப் புள்ளியாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
