உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள்
நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பொலன்னறுவையில் இன்று (20) நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன மோதல்
இனிமேல் நாட்டில் இன மோதல்கள் இருக்காது. இதே நேரத்தில், தற்போதுள்ள சட்டங்கள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அந்த நேரத்தில் அதிகாரத்தைப் பெற திட்டமிடப்பட்ட மிகப்பெரிய சோக நிகழ்வாகும்.
மேலும் 2019 ஏப்ரல் முதல் 2024 செப்டம்பர் வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் நோக்கம் உண்மையான பிரதிவாதிகள் மற்றும் உண்மையான திட்டமிடுபவர்களை மறைப்பதாகும்.
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த தற்போதைய அரசாங்கம் படிப்படியாக ஏற்பாடுகளைச் செய்யும்" என்றார்.