மறைக்கப்படும் கோவிட் புள்ளிவிபரங்கள்! குருநாகல் வைத்தியசாலையில் நாளாந்தம் ஒருவர் வீதம் எரிக்கப்படுவதாக தகவல்
கோவிட் புள்ளிவிபரங்களை அரசாங்க தரப்பு மறைக்கிறதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்திடம் பொய்யும் விளையாட்டும் தான் இருக்கிறது. சிறு பராயத்தில் இரண்டு பிரிவுகளாக விளையாடி இறுதியில் ஒன்று படுவது போல இந்த அரசாங்கத்தின் உள்ளேயேயும் இரண்டு பிரிவாக நின்று விளையாடுகின்றனர்.
இந்த விளையாட்டை 20ஆவது திருத்தத்தின் போதும், கிழக்கு முனைய விவகாரத்திலும் பாரத்தோம். இரண்டு பக்க பிரிவு விளையாட்டை தற்போதைய சூழலுக்கு ஏற்ப சிறந்த வீர்ராக விமல் வீரமன்ச ஆரம்பித்துள்ளார்.
இதும் சோடிகப்பட்ட விளையாட்டாகும். நாட்டில் உன்மையான பிரச்சினைகளை மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் தான் இதைச் செய்கின்றனர்.
ஏலவே பல வர்த்தமானிகள் வெளியிடப்பட்டும் நடைமுறைப்படுத்தாத விலை சூத்திரங்களை இன்று பந்துல குணவர்தனவின் விலை குறைப்பு சூத்திரம் இதை சாத்தியப்படைத்துமா?
வெறும் வெற்று சூத்திரங்கள். மக்களை மீளவும் விலை ஏற்றத்தின் பால் கொண்டு செல்லும் நடவடிக்கையின் ஆரம்பமாகும். கோவிட் புள்ளிவிபரங்களை அரசாங்க தரப்பு மறைக்கிறது.
நாளாந்தம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் பொய்யானது. நாளாந்தம் குருநாகல் வைத்தியசாலையில் ஒருவர் வீதம் எரிக்கப்படுவதாக அறிகிறோம்.
மஹியாவயிலும் இவ்வாறு தான் நிலை. கோவிட் சமூகத்தில் சகல மட்டங்களிலும் பரவியுள்ளன. அரசாங்கம் பொருத்படுத்தாமல் இருக்கிறது.
அரசாங்கத்தின் உண்மை பிரச்சினை பொருளாதாரமாகும். இதை மறைக்க சோடிக்கப்பட்ட பொய்களை கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.



