ஹேஷா விதானகேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஓய்வுபெற்ற சட்டத்தரணி அஜித் பிரசன்னவை அலரி மாளிகைக்கு முன்பாகத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (21) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கின் சந்தேக நபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும இறந்துவிட்டதாக நீதிமன்றத்திற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை
இதன்படி 2019 நவம்பர் 1 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த திகதிகளில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகைக்கு முன்னால் ஓய்வுபெற்ற மேஜர் வழக்கறிஞர் அஜித் பிரசன்னாவைத் தாக்கியதாகக் கூறி, கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஹேஷா விதானகே நீதிமன்றத்தில் முன்னிலையானார், அதே நேரத்தில் வழக்குத் தொடர்ந்த ஓய்வுபெற்ற சட்டத்தரணி அஜித் பிரசன்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதன்படி பிரதிவாதியின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, சாட்சியங்களை முன்வைத்து, பிரதிவாதியை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறு கோரினர்.
அரசு தரப்பு சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு இரண்டு முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும் கூறினர்.
இதன்படி வழக்கைத் தொடர்வதில் அரசு தரப்புக்கு எந்த ஆர்வமும் இல்லை, மேலும் பிரதிவாதியை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
