மாவீரர் நாளையொட்டி வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்
மாவீரர் தினத்தையொட்டி வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரப்பகுதியில் 56 மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு 24.11.25 அன்று நடைபெற்றுள்ளது.
முன்னதாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.


கோப்பாய்
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களின் நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஒட்டுசுட்டான்
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
கடந்த (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டிசுட்டான் பிரதேச மாவீரர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

வாழைச்சேனை
வாழைச்சேனை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் மாவீரர்களின் நினைவு தினம் அனுடஸ்டிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மானிப்பாய்
மண்ணுக்காக தமை ஈர்ந்தவர்களை நினைவேந்தும் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வழமை போன்று இவ்வருடமும் பெற்றோர் உரித்துடையவர் மதிப்பளிக்கும் நிகழ்வு மானிப்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரப்பகுதியில் 56 மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு 24.11.25 அன்று நடைபெற்றுள்ளது.



