காத்தான்குடியில் ஹெரோயின் வியாபாரி ஒருவர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் ஹெரோயின் போதைபொருளுடன் வியாபாரி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (19) மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்து காத்தான்குடி பொலிஸார் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பு நடவடிக்கை
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய குறித்த பிரதேசத்திலுள்ள வீதி ஒன்றில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போதைபொருளை விற்பனைக்காக எடுத்து சென்ற வியாபாரியை மடக்கி பிடித்துள்ளனர்.
இதன் போது அவரிடமிருந்து 710 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து சந்தேகநபர், அண்மையில் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் எனவும் இவர் தொடர்ச்சியாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரை காத்தான்குடி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
