அதிவேக வீதியில் கைப்பற்றப்பட்ட ஆறு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்
தெற்கு அதிவேக வீதியில் சொகுசு கார் ஒன்றில் கடத்தப்பட்ட ஆறு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காலி - அக்மீமன பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து நேற்றிரவு தெற்கு அதிவேக வீதியில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது காலி, பின்னதூவ நுழைவு அருகே சந்தேகத்திற்கிடமான சொகுசுக்கார் ஒன்றை மடக்கி சோதனையிட்ட பொலிஸார் அதில் இருந்த பொதிகளை வெளியில் எடுத்துப் பரிசோதிக்க முனைந்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காரில் இருந்தவர் தப்பித்துச் சென்றுள்ளார்.பொலிஸார் கைப்பற்றிய பொதியில் ஆறு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தப்பிச் சென்ற நபர் பாணந்துறை பிரதேச்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்ற நபரைக் கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri