உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்: இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்..!
2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் (Henley Passport Index) 101 நாடுகளில் இலங்கை 93 ஆவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன. அதே நேரத்தில் டென்மார்க் மற்றும் லக்சம்பர்க் முறையே மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்த இரு நாட்டு கடவுச்சீட்டில் 188 மற்றும் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
நாடுகளின் தரவரிசை
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் 101 ஆவது இடமான கடைசி இடத்தில் உள்ளது.இந்த கடவுச்சீட்டில் 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும் .
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, இலங்கை கடந்த ஆண்டு 44 நாடுகளுக்கான விசா இல்லாத அனுமதியுடன் 96 ஆவது இடத்தில் இருந்தது.

அது இந்த வருடம் 39 நாடுகளாக உள்ளது. நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளை விட இலங்கை கடவுச்சீட்டு இன்னும் உயர்ந்த இடத்தில் உள்ளன.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடானது நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி தரவரிசைப்படுத்துகிறது.