கொரோனாவின் பிடியிலிருந்து இலங்கை மீண்டெழ உதவுங்கள் - சஜித் வேண்டுகோள்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் இடையில் முக்கிய சந்தித்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத் தருமாறு கனேடியத் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவறின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது முக்கியத்துவம் வாய்ந்த இரு தரப்புப் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.
குறிப்பாக உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள
கொரோனாத் தொற்று காரணமாக ஒரு நாடாக இலங்கை எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள்
குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம்
செய்தி வெளியிட்டுள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
