மாற்றுத் திறனாளிகளின் சுய உதவி குழு வலுவூட்டல் தொடர்பிலான கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டல் தொடர்பான சுய உதவி குழு கலந்துரையாடல் இன்று (15) புதுக் குடியிருப்பு கிராம சேவகர் கட்டடத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கு இணங்க நடைபெற்றுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் சங்கங்களை வலுவூட்டல்
மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் திட்டமொன்றை வழங்குவது தொடர்பிலும் மாதாந்த கொடுப்பனவு பெறும் பயனாளிகளை மாதாந்தம் கையொப்பமிடுவது தொடர்பில் எதிர்கால சுய உதவி குழு மாற்றுத் திறனாளிகளின் சங்கங்களை வலுவூட்டுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,மருதம் மாற்றுத் திறனாளி சங்க உறுப்பினர்கள்,பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



