பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு
அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று (04.06.2023) காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று தரையிறங்கியதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் குறித்த உலங்கு வானூர்தி வந்ததாக பிரதேசவாசிகள் சந்தேகித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் நடமாடுவதில் சிரமம்
இது தொடர்பில் கொக்காவெவ பொலிஸாரிடம் வினவிய போது, குறித்த குழுவினர், புற்று நோயாளர் ஒருவருக்காக பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோயாளி நேற்று காலை வாகனம் மூலம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மீண்டும் நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உலங்கு வானூர்தி
இதனையடுத்து நோயாளியை அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றே அந்த உலங்கு வானூர்தியில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
