தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு தொடர்பில் சபையில் வெடித்த சர்ச்சை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை புனரமைக்கும் அரசாங்கம் டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் வீடு கட்டி கொடுக்கவில்லை. இது வெட்கக் கேடான செயற்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06.02.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,
பிரபாகரனின் வீடு புனரமைப்பு
தேசிய சுதந்திர தினத்தில் கடனுக்கு வாங்கிய யுத்த உபகரணங்களை காட்சிப்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தனர். அது அபிமானத்திற்குரிய செயற்பாடல்ல என்றனர்.
இராணுவ வீரர்கள் யுத்த உபகரணங்களுடன் ஊர்வலம் வரும் போது தான் அவர்களுக்கு அபிமானம் இருக்கிறது. நீங்கள் இந்த நாற்காலிகளில் அமர்ந்திருப்பது இராணுவ வீரர்கள் செய்த தியாகங்களில் தான்.இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்திய கடற்படையினர் எங்கள் கடல் எல்லைக்கு வந்து எமது மீனவர்களை தாக்கியுள்ளனர்.அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்திய அரசாங்கத்திடமும் பேசவில்லை.அந்த மீனவர்களை கூட போய் பார்க்கவில்லை.இதற்காக எந்த திட்டங்களையும் அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri