வவுனியாவில் கடும் காற்று - மழை: 1,500இற்கும் மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிவு(Photos)
வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1,500இற்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடும் வெப்பதற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்றைய தினம் மாலை (20.04.2023) திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.
இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1,500இற்கும் மேற்பட்டபப்பாசி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து அழிவடைந்துள்ளது.
விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, புகையிலை, கத்தரி உள்ளிட்ட பயன்தரு மரங்களும் காற்றில் முறிந்து அழிவடைந்துள்ளன.
தமது வாழ்வாதாரமாக மேற்கொண்ட பயிர்கள் அழிவடைந்தமை
காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
