கனரக வாகனமும் வான் ஒன்றும் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி கிளபென்பேக் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (09) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரத்னகலாவதி (72வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த வயோதிபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri