கனரக வாகனம் விபத்து - இருவர் காயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் இன்று காலை 7 மணியளவில் பஸ் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியிலிருந்து ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்ற தலவாக்கலை சென்.கிளயார் பகுதியை நோக்கி சென்ற பஸ் ஒன்றும் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற கனரக வாகனம் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் லொறியின் சாரதியும், பஸ்ஸின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் ஹட்டன் - நுவரெலியா வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.
குறித்த கனரக வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
