எதிர்வரும் வாரத்தில் கடுமையான பனிப்பொழிவு - ஜேர்மன் மக்களுக்கான எச்சரிக்கை
பனிப்புயல் காரணமாக எதிர்வரும் வாரத்தில் ஜேர்மனியில் குறைந்த அளவிலான வெப்பநிலை பதிவாகும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடுமையான பனி மற்றும் குளிர்கால புயல்களால் ஜேர்மனியின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதுடன் விளையாட்டுப் போட்டிகள் சிலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த வார இறுதியில், ஜேர்மனியில் கடுமையான குளிர் காலநிலை நிலவியதால் எதிர்வரும் வாரத்தில் வெப்பநிலை மிகக்குறைவாகவே காணப்படும் என வானிலை அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், திங்கட் கிழமை அதிக பனிப்பொழிவு ஏற்படும் என்றும் ஜேர்மனியில் சில பகுதிகளில் 40 சென்றி மீற்றர் வரை பனி மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
