கொழும்பில் கடும் பாதுகாப்பு : களத்தில் 100 புலனாய்வு அதிகாரிகள் - செய்திகளின் தொகுப்பு
கொழும்பில் (Colombo) பாதுகாப்பு கடமைகளுக்கு 100 புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சுமார் 100 புலனாய்வு அதிகாரிகளே தமது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் வாகன திருட்டு, தங்க நகை கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக, கொழும்பில் பொதுப் பணிகளுக்காக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பணிப்புரை விடுத்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |