கடும் மழையால் ஹட்டன் நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கின
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் இன்று(13.10.2026) பிற்பகல் பெய்த கடும் மழையால், ஹட்டன் நகரின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியதுடன், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பாடசாலைகள் நிறைவடையும் நேரத்திற்கு அண்மையில் பெய்த இந்தக் கடும் மழையினால், ஹட்டன் நகரில் முறையான வடிகால் அமைப்பு இல்லாத காரணத்தால் மழைநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
முறையற்ற வடிகால் அமைப்பு
குறிப்பாக, பாடசாலைகள் நிறைவடைந்து வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் வீதிகளில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிகள் முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், நகரின் வாகனப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சில சாரதிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
ஹட்டன் நகரில் நிலவும் முறையற்ற வடிகால் அமைப்பை உடனடியாகச் சீரமைத்து, மழைக்காலங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகிந்த மற்றும் ஷிரந்தியின் பெயரை வைத்து பிணை கோரிய நாமல் தரப்பு! செய்தியை தானும் பார்த்ததாகக் கூறி மறுத்த நீதவான்




