மலையகத்தில் மண்சரிவு அபாயம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நுவரெலியா - நோட்டன் பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து விமலசுரேந்திர மின் நிலைய நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேநேரம் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்றிரவு (01.07.2023) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் தேயிலை, கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புள்ளாகியுள்ளது.
மண்சரிவு அபாயம்
இந்நிலையில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் மண் சரிவு அபாயமும் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பினரின் வலியுறுத்தல்
அத்துடன் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன
சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து துறை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், குறித்த நீர் வீழ்ச்சியினை பார்வையிடுவதற்கு அருகில் செல்வதனை தவிர்த்துக்கொள்வதன் மூலம் ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
