அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேல், தென் மாகாணங்கள், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோர பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் கோரிக்கை
இதேவேளை ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை நிலவும் என அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan