மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos)

Sri Lanka Upcountry People Ceylon Electricity Board
By Kanamirtha May 11, 2022 10:04 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

புதிய இணைப்பு

நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக நோட்டன் எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றுக்கு மேலிருந்து பாரிய கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்து எண்ணை நிரப்பு நிலையத்தின் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos) | Heavy Rains Central Highlands Issued Public

குறித்த கட்டத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி, ஒரு வேன் ஆகியன சேதமடைந்துள்ளன.

குறித்த மண்சரிவு ஏற்படும் போது அதில் எவரும் இல்லாது இருந்ததன் காரணமாக எவருக்கும் சேதமேற்படவில்லை. இதே நேரம் நோட்டன் தியகல பிரதா வீதிகள் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.

மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos) | Heavy Rains Central Highlands Issued Public

இன்று காலை வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வீதியில் கொட்டிக்கிடந்த பாரிய கற்கள் மற்றும் மண்ணை அகற்றியதன் காரணமாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.

குறித்த வீதியில் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.

மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos) | Heavy Rains Central Highlands Issued Public

இதே நேரம் ஹட்டன் - காசல் ரிஊடான நோட்டன் வீதியிலும் பல இடங்களில் மண்வரிவு ஏற்பட்டுள்ளன. தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனாலும் பல இடங்களில் மண்சரிவு அவதானம் காணப்படுவதனாலும் இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos) | Heavy Rains Central Highlands Issued Public

மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos) | Heavy Rains Central Highlands Issued Public

முதலாம் இணைப்பு 

மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு தினங்களாக நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக லக்ஸபான மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் நீர்த்தேக்கங்களின் கீழ் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சாரசபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos) | Heavy Rains Central Highlands Issued Public

கடந்த பல மாதங்களாக நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் என்றுமில்லாத அளவுக்கு குறைவடைந்தன இதனால் நீர் மின் உற்பத்தியும் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்தன.

இந்நிலை தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதனால் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos) | Heavy Rains Central Highlands Issued Public

இதே வேளை காசல்ரி மற்றும் மவுசாக்கலை பகுதிகளிலும் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால் அந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகின்றன.

கடந்த காலங்களில் நீர் வற்றியதன் காரணமாக தென்பட்ட பழய கட்டங்கள் மற்றும் சிறிய தீவுகள் ஆகியன தற்போது படிப்படியாக மூழ்கி வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளுக்குக் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து இன்று காலை மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கொத்மலை ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன் சென் கிளையார் நீர் வீழ்ச்சியின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

எனவே இந்த ஆற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சார சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மத்தியமலை நாட்டில் கடும் மழை காரணமாக மண்சரிவு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Photos) | Heavy Rains Central Highlands Issued Public

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US