நாட்டில் நிலவும் மோசமான காலநிலை! - பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை தொடர்ந்தும் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் (மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில்) மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமான மழை பெய்யக்கூடும் எதிர்பார்க்கலாம்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam