மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்குப் பின் பலத்தமழை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.
இன்றைய தினம் (08.10.2026) காலை 8.30 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 36.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
காற்று சுழற்சி
இலங்கை அருகே மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது சற்று வலுவடைந்து காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு சில நாட்களுக்கு இடையிடையே மழை காணப்படும். இது சில நாட்களுக்கு தொடரும்.

இந்த காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து மாலைத்தீவு மற்றும் லட்சதீவுக்கு இடைப்பட்ட பிராந்தியத்திற்கு செல்லும்போது, மேலும்மொரு காற்று சுழற்சியானது எதிர்வரும் 14ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகி தமிழ்நாடு ஊடாக அரபிய கடல் பிராந்தியத்திற்கு செல்ல இருக்கின்றது.
மழை வீழ்ச்சி
இதன் காரணத்தினால் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு (14, 15, 16, 17ஆம் திகதிகளில்) கிழக்கு மாகாணங்களில் மழையானது இடையே சற்று அதிகரித்து காணப்படுகிறது.

வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் பெரும்பாலும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சற்று அதிகமான மழையானது தொடர்ச்சியாக சில நாட்களுக்கு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோன்று மேலும் ஒரு நிகழ்வானது எதிர்வரும் 18ஆம் திகதி அளவில் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri