வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பு! நபரொருவர் மாயம்
நீர்கொழும்பு கட்டுவ-புவக்வத்த பிரதேசத்தில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலத்த மழை பெய்யும் ஒவ்வொரு காலத்திலும் இந்த பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் தெப்பா எல பெருக்கெடுத்து தங்களது வீடுகளுக்குள் வெள்ளம் வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக சிலர் தமது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களுடைய வீடுகளில் தங்கி உள்ளனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்
இதேவேளை நேற்று மாலை நீர்கொழும்பு பெரிய முல்லை, நூர் மத்ரஸா ஒழுங்கையில் உள்ள பாலத்திலிருந்து தவறி விழுந்து 59 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
முஹம்மத் சலீம் மன்சூர் என்பவரே இவ்வாறு காணாமல் போய் உள்ளார். இவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
